குறைவாக எழுதினாலும், அடர்த்தியாக எழுதுவது, கவிதைக்கு அழகு. கவிஞர் பேனா மனோகரன் அவர்களின் கவிதைகளில் 'காக்கி' நிறம் பதிவாகாமல் இருப்பது ஒரு சிறப்பு. நவீன தகவல் தொடர்புச் சாதனங்களின் வருகை உலக மயமாகல் மின்னணுமயம், இயந்திரமயமாக்கல் போன்ற அறிவியல் காரணங்களால், மனித வாழ்க்கையில் சில மாற்றங்கள் புகுந்துவிட்டன. இம்மாற்றங்கள் காக்கைகளையும் விட்டு வைக்க வில்லை என்பதைக் கவிஞரின் "கற்ற்றிந்தத காக்கைகள்" என்ற கவிதை சுட்டிக் காட்டுகிறது. மனித குலத்தின் மீதும், சுற்றுச் சூழல் மீதும், பசுமை நேசம் குறித்தும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட இக்கவிஞரின் படைப்புகள், கவித்துவத்துடனும் ஜொலிக்கின்றன.