எள் பயிரில் மகசூலைப் பெருக்கப்பல புதிய தொழில் நுட்பங்கள் இருந்தும், பலகாரணங்களால் இந்தத் தொழில் நுட்பங்கள் விவசாயிகள் மத்தியில் பிரபலமாகவில்லை. இதை உணர்த்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கனடா நாட்டில் ஐ.டி.ஆர்.சி நிறுவன உதவியுடன், எள் பயிரில் பண்ணைப் பரிசோதனைத் திட்டம் ஒன்றை விருத்தாசலம் வேளாண்மை அறிவியல நிலையத்தில் 1988 இல் தொடங்கியது.
இத்திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள், வயல் வெளியில் கண்டறிந்த பல பிரச்சினைகளுக்கு, இப்புத்தகத்தின் மூலர், சிறப்பாகத் தொழில் நுட்பக் கருத்துக்களைக் கேள்வி - பதில் வடிவில் விளக்கியுள்ளார்கள்.