கவிதை ஏதோ ஒரு அனுபவத்தைப் பிரதிபலிப்பதோ, காலங்காலமான அனுபவங்களை முட்டிமோதிச் சொல்லி முடிப்பதற்கான எத்தனிப்போ அல்ல; மாறாக, அதுவே ஓர் அனுபவத்தை அல்லது புலன் மெய்ப்பை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறும் ரமேஷ் - பிரேமின் புதிய கவிதைகள் இவை. கதை கூறலின் நீட்சியையும் மிகைபுனைவின் விநோதங்களையும் தொன்மங்களின் அழிவற்ற நினைவுகளையும் புலன்றிதலின் எல்லைகளை மீறி நழுவிச் செல்லும் உடலின் தாபங்களையும் தன்னிச்சையான மன இயக்கத்தின் ரகசிய நகர்வுகளையும் பற்றிய பதிவுகளைத் தமது அடிப்படைக் கூறுகளாகக் கொண்டுள்ளன இக்கவிதைகள்.