கதைகளை அனுப்பி அவற்றையும் மொழிபெயர்த்துக்கொள்ள அனுமதித்தார். தொடர்ந்து 'ஹார்ன் இசைப்பவர்' என்ற கதை காலச்சுவடில் வெளிவந்தது. சோகமும் ஹாஸ்யமும் இழையூடும் அந்தக் கதையும் பரவலாக வாசகர் கவத்தைப் பெற்றது. ஸோரன்டினோவின் வேறு சில கதைகளையும் சேர்த்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரலாமே என்ற கண்ணனின் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. எனவே இந்தத் தொகுப்பு.