இக்கட்டுரைகள், சக்கரியாவின் தமிழக மோகத்தாலும் கூடப் பொறுக்க முடியாத குறைபாடுகளாக தலித் ஓடுக்குமுறை, ஓலி மாசு, அரசியல்வாதிகளின் ஆதிக்கம் போன்றன நம்மைப் பீடித்துள்ளதையும் இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டுகின்றன. இவற்றோடு நாம் கொள்ளும் கருத்து முரண்பாடுகளையும் தாண்டி ஒரு அறிவுஜீவியின் சுதந்திரமான செயல்பாடு இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றதைப் பார்த்து மெச்ச முடிகிறது. சிந்திக்க, முரண்பட விவாதிக்கத் தூண்டும் நூல் இது.