கவிஞர்கோ' கோவை இளஞ்சேரன் நல்ல தமிழறிஞர். ஆய்வாளர். பட்டி மண்டபம் தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெளிவாக, அருமையாக எழுதியுள்ளார். வழக்கம் போல அவருக்கேயுரிய இனிய, எளிய, ஆற்றொழுக்கமான தூய தமிழ் நடை நூலுக்குரிய மதிப்பை கூட்டியிருக்கிறது. பலப்பல நூல்களைப் படித்தும்,நாட்டின் நடப்புக்களை அறிந்தும் நூலை எழுதியுள்ளமை, நூலாசிரியரின் கடின உழைப்பைப் புலப்படுத்துகிறது. தமிழார்வலர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)