ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஆறுமுகம் கொண்டு விளங்கிய கருணையைப் பாம்பன் சுவாமிகள் அறுமுகச் சிவன் என்று குமரவேளைப் போற்றி எத்துதலும் உணரத் தக்கது. நூலின் இறுதியில் சாற்றப்பட்டுள்ள முருகப் பெருமான் விரத மகிமையானது தேனமுதாய் விளங்கி அன்பர்களை வாழ்விக்கும். இத்தகு ஏற்றமிகு கருணைபுரியும் கந்தவேளின் வரலாறு இங்கு உரைநூலாக வெளிவருகின்றது.