திரும்பத் திரும்ப இம்மனிதர்களின் கதையை எழுதி, சொல்லி, பேசி என்னவாகப் போகிறது என்ற சலிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னுள் நான் கண்டறிந்த உண்மை, என்னால் இதை மட்டுமே செய்ய முடியும் என்பதுதான். என்னால் தத்துவங்களையோ, ஆன்மீக தரிசனங்களையோ, வாழ்வை உய்விக்கக் கூடிய பிரச்சாரங்களையோ செய்ய முடியாது. ஆனால், இவையனைத்தும் ஒரு தனிமனிதனின் அன்றாட வாழ்வில், அவனது நிறைகுறைகளில், அவனது வெற்றி தோல்விகளில், அவனது மேன்மை கீழ்மைகளில் கண்டடைய முடியுமென்று நம்புகிறேன்.