முகில் தினகரன் அவர்கள் எழுதிய கானல் நீர் வேட்கை, கனவுகள் உலவும் வீதியிலே என்ற இரண்டு கதைகளின் தலைப்புகளும் ஒரே தலைப்பு போல சூட்டியிருப்பது புதுமை.
முதல் கதை 'கானல் நீர் வேட்கை' ஒரு கிரைம் கதை . இறந்தவர்கள் பயன்படுத்திய மெத்தைகளை சேகரித்து புதுப்பித்து வியாபாரம் செய்யும் கிரிமினல் நண்பர்கள் துரை, சுந்தர் கதை. ஜெர்மனியின் பணி புரிந்து இந்தியாவிற்கு வைரம் கடத்தும் கௌதம், அதை மேத்தையில் பதுக்கி வைத்து விட்டு இறந்து போகும் அவன் தந்தை சுந்தரேசன் மின் மயானத்தில் மெத்தைகளின் சேகரிக்க உதவும் காவலாளிகள், மெத்தைகளை புதுப்பிக்கும் வெள்ளைச்சாமி, வைரங்களை விற்க உதவும் அரசியல்வாதிகள் மணிமுடி ராமலிங்கம் என ஏகப்பட்ட கிரிமினல்கள். விறுவிறுப்புக்கு கேட்க வேண்டுமா படிக்க ஆரம்பித்தால் கீழே வைத்து முடியாத அளவிற்கு கதை போகிறது.
'கனவுகள் உலாவும் வீதியிலே' திரைப்பட துறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.
அதிரடி ஆக்ஷன் ஸ்டார் ஆகாஷ் பரபரப்பான ஆடம்பர வாழ்க்கை சலித்துப்போக பஞ்சு மிட்டாய்காரன் வேடத்தில் வெளியேறுகிறார். புதுமையான இந்தக் கரு அவர் தற்செயலாக கொல்லப்பட்டதும் க்ரைம் திசையில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது.
யாரோ ஒரு பஞ்சுமிட்டாய்காரனைக் கொல்லப் போட்டிருந்த சதி வலையில் யதார்த்தமாக
பஞ்சுமிட்டாய்க்காரன் கெட்டபபில் போன நம் ஹீரோ கொல்லப்படுகிறார்.
கடைசியில் அவர் பிழைத்து விடுவார் என்பதை கதையைப் படிக்கும்போதே ஊகிக்க முடிந்தாலும் கதை எப்படிதான் முடியும் என்ற ஆவலை தூண்டுகிறது.
இக்கதையை திரைப்படமாக எடுக்கலாம். அந்த அளவிற்கு கதையில் சுவையான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
எந்தக் களத்தின் அடிப்படையிலும் தம்மால் கதைகளை கற்பனை செய்து படைக்க முடியும் என்பதை முகில் தினகரன் இந்த இரு கதைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்.
க.ரவீந்திரன்