இந்த கதை 2014 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.
விடியக் காத்திருந்தது கிழக்குத் திசை.
கோவை நகரின் காற்றில் ஓஸோன் குளிர். மரங்களில் பறவைகளின் கத்தல். எங்கோ தொலைவில் இருந்த மசூதியிலிருந்து அல்லா அக்பர்.
கோவை ரயில்வே ஸ்டேஷனின் மூன்றாவது பிளாட்பாரத்திற்குள் தன் நீண்ட உடம்பை நுழைத்தது சேரன் எக்ஸ்பிரஸ். 2A கம்பார்ட்மெண்ட்டிலிருந்து வெங்கட் இறங்கினான்.கறுப்பு பேண்ட், வெள்ளை சர்ட், பயணக் களைப்புத் துளியும் தெரியாத உற்சாக முகம். எண்ணெய் மினுமினுப்போடு சுருண்ட முடி, தன்னுடைய பெரிய ரோலர் சூட்கேஸை உருட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான்