இந்நூல்...
இந்நூல் ஜோதிடத்தில் எனது அடுத்த மைல்கல் ஆகும். இந்நூல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் பதிப்பாக வெளிவருவதில் மகிழ்கின்றேன். இந்நூலில் ஒருவரது வருமானத்தின் போக்கு எப்படி அமைகின்றது? என்பது பற்றி மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் கிரகங்கள் தரும் தொழில் / வேலைவாய்ப்பு என்ன? இராசிகள் காட்டும் வருமான அமைப்பு என்ன? நட்சத்திரங்களில் வருமான கிரகம் இருந்தால் என்ன தொழில் அமையும்? என்ன வேலை அமையும்? போன்றவற்றைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இராசிகளில் நின்ற கிரக நிலைகளால் ஒருவரின் வருமான நிலை உயருமா? உயராதா? வாழ்வு தாழ்ந்த நிலைக்கு போகுமா? போகாதா? போன்றவற்றை உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாகக் கொடுத்திருக்கின்றேன். எனது நூல்களில் கிரகங்களின் திரிகோணங்கள் எதிர்காலமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பராசரர் முறைப் பார்வைகளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பலரின் நன்மை கருதி உதாரண ஜாதகங்களுக்கு பிறந்த விபரம் கொடுத்திருக்க மாட்டேன். இவை அனைத்தும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுதப் பட்டுள்ளது. பல கருத்துக்கள் பல்வேறு நாடிநூல்களின் மாறுபட்ட கோணஆய்வாகும். பல கருத்துக்கள் நமது வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் அளித்த விளக்கங்களையும் இங்கே கொடுத்திருக்கிறேன். இந்நூலில் கிரகங்களுக்கும், இராசிகளுக்கும் பலன்கள் சொல்லப்பட்ட அளவிற்கு பாவகங்களுக்குச் சொல்லப்பட வில்லை.