1. குழந்தைப்பேறும் ஜோதிடமும்
உலகில் குழந்தைச் செல்வம் மட்டுமே எல்லாச் செல்வத்திலும் முதன்மையானது என்பது திருவள்ளுவர் வாக்கு. வயிற்றில் வளரும் பத்துமாதக் குழந்தைக்கு மாதம் ஒரு கிரகம் முலம் கருவளர்ச்சிக்குக் காரணமாகிறது. ஒவ்வொரு மாத கருவிற்கும் ஒரு கிரகம் காரணமாக இருப்பதால் எந்தக் கிரகம் நல்ல நிலையில் இருக்கிறதோ? அந்த மாதக்கருவளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. எந்த கிரகம் தீயநிலையில் இருக்கிறதோ? அந்தக் கிரகத்திற்குரிய கருவளர்ச்சியும், உறுப்புக்களும் பாதிப்படைகிறது. பத்து மாதக் கருவளர்ச்சிக்குரிய கிரகங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
2. பத்து மாத கருவும் கிரகமும்
1. முதலாவது மாதம்
ஆண், பெண் உயிரணுக்கள் இரண்டறக் கலக்கச் செய்கின்ற இராசயன மாற்றத்திற்குச் சுக்கிரன் காரணமாகிறார். இதனால் முதலாவது மாத கருவிற்குச் சுக்கிரன் அதிபதியாகிறார். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் முதல் மாதக் கருவிலும், உயிரணுக்களின் கலப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
2. இரண்டாவது மாதம்
ஆண் பெண் உயிரணுக்கள் இரண்டறக் கலந்து செய்த இரசாயன மாற்றம் பிண்டமாக உருவாகச் செவ்வாய் காரணமாகின்றார். இதனால் இரண்டாம் மாதக் கருவிற்குக் செவ்வாய் அதிபதியாகின்றார். செவ்வாய் பாதிக்கப்பட்டால் இரண்டாவது மாதக் கருவும் மாதக்கருவில் உருவாகும், வளரும் உறுப்புக்களும் பாதிக்கப்படுகிறது.