நூல் குறிப்பு:
மேற்குலக மனவெளிகளுக்குள் நுழைய முடியாத யாழ்ப்பாண மனிதர்களின் மன இருப்பின் போராட்டங்களை சொல்லும் அதேவேளையில், அதன் விருப்பங்கள் அனைத்திலும் அனாயசமாக நுழைந்து அய்க்கியமாகிக் கொண்டிருக்கும் அடுத்தத் தலைமுறை இருப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும் இக்கதைகள் ஈழத்து புலம்பெயர் சமூகங்களின் இனத்தை, அதன் வாழ்வை உலகம் புரிந்துகொள்ளும் பலகணியாக இக்கதைகளை புரிந்துகொள்ள முடியும்.
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் நவரட்னம் கேதீஸ்வரன். யாழ்ப்பாணம் வேலணையில் பிறந்து நார்வேயில் வசித்து வருபவர். இருபதாவது வயதிலிருந்தே நவமகன் எனும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள் எழுதியதன் மூலமாக அய்ரோப்பாவில் வெளியான சஞ்சிகைகள் பத்திரிகைகளில் அறியப்பட்டவர். போக்காளி இவருடைய முதலாவது நாவல்.