தமிழரின் திணைக்கோட்பாட்டை மீட்டெடுக்க முயன்ற நக்கீரரின் முயற்சியாகத் திருமுருகாற்றுப்படையின் இறுதிப் பகுதி அமைகிறது. இந்த நூல், சங்க இலக்கியத் தொகுப்பிலும் பன்னிரு திருமுறைகளிலும் ஒருங்கே வைத்து வாசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு, ஐவர் பழங்காலத்தில் உரை எழுதியுள்ளனர். அவற்றுள், காலத்தால் முற்பட்டது கவிப்பெருமாள் உரை. அந்த உரை, இந்த நூல்வழிதான் தனி நூல் அடையாளத்தைப் பெறுகிறது.