மனத்திட்பமும் வினைத் திட்பமும் ஒருங்கமைந்த அமெரிக்க சஸ்திர நிபுணர் ஒருவரின் அற்புத வரலாறு இது. அவர் நடத்திய பரிசோதனைகள் ஏராளம். அவற்றைவிட, அவர் அனுபவித்த எதிர்ப்புகள் ஏராளம். தளரா ஊக்கமும் நம்பிக்கையும் கொள்கைப் பிடிப்பும் அவர் பங்கில் நின்று எதிர்ப்புகளைச் சாடி வாகை சூடின.