தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது. குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட்டுமே எல்லாவற்றிடலும் பேச இயலும் என்றும் சொல்லலாம்.