சிறுவர்க்காகவும், பெரியவர்க்காகவும் ஆர்வி அவர்கள் படைத்த படைப்புகளின் பட்டியல் மிக நீளமானது. அவரது சிறுவர் இலக்கியப் புதினங்களை மட்டும் விரிவாகவும், சுவையாகவும் ஆய்வு செய்து நூலாக்கியிருக்கிறார், 'கண்ணன்' பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர்.ஈ.எஸ். ஹரிஹரன் (ரேவதி). இவரைப் போன்றே, ஆர்வி பள்ளியில் பயின்ற அரை நூற்றாண்டு வயதான மாணவன் நான்.