நூலின் அமைப்பு கையாளப்படும் விஷயத்தின் முக்கியத்தை விளக்கும் வகையில் இருக்கிறது. இதற்காக இந்தத் தீபகற்பத்தின் இயற்கையையும், வரலாற்றில் - குறிப்பாக, கடல் வழி நடவடிக்கைகளில், அதன் விளைவுகளையும், முதலில் விரிவாய் எடுத்துரைக்கிறார். இத்துடன், வரலாற்றின் பல்வேறு கட்டங்களில், கடல்வழி வணிகம் எவ்வாறு பல மாறுதல்களுக்குட்பட்டது என்பதை அந்தந்தக் காலத்து மன்னர்கள் ஆட்சி முறைகள் எவ்வாறு உதவின என்பதையும் விளக்குகிறார்.