அமுதா பொற்கொடி, பெயரே பெரும் கவிதான். கவிதை எழுதி அடியில் பெயரிடுவார்கள். ஆனால் கவியே முன் வந்து கவி தருவதுபோல் இவர் பெயர் கேட்கும்போதே பிரமிப்புத் தோன்றிவிடுகிறது. ஆசிரியை குடும்பத்தலைவி, இந்த இருபெரும் பொறுப்புகளைச் சுகமாய் தாங்கிக் கொண்டே, கவிஞர் எனும் பட்டத்தையும் அணிகலனாய் அணிந்து உலாவரும் பெருமையை பெற்றிருக்கிறார் கவிஞர் அமுதா. என்றாவது, எப்போதாவது எழுதுகோல் எடுத்து வரிகளைப் பிரித்து எழுதி இதோ கவிதை... கவிதை என்று கூச்சலிடுபவரல்ல இவர். தன் மூச்சுக்காற்றில் கவிதையை முடிச்சுப்போட்டு வைத்திருப்பவர்.