வரம்பிலா ஆற்றல் வரவேண்டும் என்றால், வரந்தரும் ஞானிகளின் இடந்தேடிப்போகலாம். அந்த ஞானியே நம் சொந்தமானவராய் இருந்து விட்டால், அவரும் கேட்பதற்கு முன்னரே தந்துவிட்டால்... நினைத்துப்பார்க்கவே நிறைவாய் இருக்கிறது. இந்தப் ததகத்தைப் படித்துப் பார்க்கையில் அது உண்மையாய்த் தெரிகிறது.