வீடு கட்டுவதில் உள்ள அல்லல்களையும், கட்டி முடித்துப் புதுமனையில் வாழும்போது கிடைக்கும் ஆனந்தத்தையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது. கட்டிய வீட்டை வாங்குவதா? மனை வாங்கிக் கட்டுவதா? பழைய வீட்டை வாங்குவதில் லாப நஷ்டம் என்ன ? துரதிருஷ்டம் பிடித்தவை ;என்று கருதப்படும் வீட்டை வாங்குவோருக்கு இருக்க வேண்டிய மனோதிடம் - வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிலம் மற்றும் குடியிருப்புக் கட்டங்களின் சொத்து மதிப்பு உயர்தல் பற்றி விளக்கம்.