சமயம் ,மதங்களெல்லாம் பொய். மனிதம் மணிதநிலை கடந்து அதிமனிதநிலை அடைய வேண்டும். இவ்வுலகில் உண்மை. இவ்வாழ்க்கை உண்மை. இவற்றை முழுமையாக அனுபவிக்கத் தேவையான கடவுள் கொள்கை கலையே. மனித வாழ்வை மூடியிருக்கின்ற மாயத்திரைகளைக் கிழித்தெறிந்து, வாழ்வுத்தேனை மாந்தி மாந்தி அருந்தக் கற்றுத்தந்த தத்துவக் கவிஞன் நீட்சே. அவனுடைய உயிர்க்கொள்கைகளைக் காலத்துக்கேற்பத் தகவலமைக்கின்றது இச்சிறு நூல்.