இத்தொகுதியில் இலங்கைப் பெண்களின் 25 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 1996 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையில் பிரசுரிக்கப்பட்டவை. இவற்றுள் 24 கதைகள் அவற்றை எழுதியோரின் தொகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. 'கறுத்த நாயும் பாத்ரூமும்' என்ற கதை மாத்திரம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. நயீமா சித்திக், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகிய இருவர் தவிர்த்த ஏனையோர் 90 களிற்குப் பின்னர் எழுதத் தொடங்கியவர்கள்.