"ஞானமடைய புதுப் பாதை” என்ற என் விளக்கத்தில் ஓஷோவின் பாதை பற்றிச்
சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சிலர் என்னிடம் கூறினார்கள்.
ஆகவே அது பற்றி விளக்கமாக இப்போது எழுதுகிறேன்.
ஓஷோ தனது பேச்சுகளில், “ஜோர்பா என்கிற புத்தா', “கரைந்து அனுபவி”,
“கணத்திற்கு கணம் வாழு”, “விழிப்புணர்வோடு வாழு” "இந்த உடலே புத்தர் இந்த
பூமியே சொர்க்கம்", "கிழக்கும் மேற்கும் இணைந்த வழி என் வழி”, “பொருளோடு
கூடிய ஆன்மீகமே என் வழி”, என்று பலவிதமாக தனது வழியைக்
குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது ஓஷோ வரையிலிருந்த மதங்களும் ஆன்மீக இயக்கங்களும் ஒருதலைபட்சமான
போக்கைக் கடைபிடித்தன. அவை உலகியலுக்கும், சந்தோஷமான வாழ்விற்கும்,
புலனின்பங்களுக்கும், பெண்களுக்கும், செல்வத்திற்கும் எதிராக இருந்தன.
இதனால் ஒருபுறம் உலகமும், மனமும் துண்டிக்கப்பட்டு மக்கள் இயல்பிழந்து
வறுமையடைய நேர்ந்தது. மற்றொரு புறம் உலகியலில் ஈடுபட்டவர்கள்
உள்உணர்விழந்தவர்களாய் மாற நேர்ந்தது. இப்படி வெறும் மனதில் மட்டுமே
வாழ்கையில், திசை தெரியாத பயணமாய், மனதின் முடிவற்ற ஓட்டத்தில் மக்களிடையே
போலித்தனமும், குற்றவுணர்வும் மிகுந்ததால் உணர்வுமயமான வாழ்க்கை போய்
இயந்திரத்தனமான, பரபரப்பான, வேகமான, வியாபாரத்தனமான, படபடப்பான
வாழ்க்கையில் எல்லோரும் சிக்கிவிட்டனர்.
இதையெல்லாம் பார்த்த ஓஷோ, தான் ஞானமடைந்ததோடு நில்லாமல் அதன்பின்னர்
இன்றைய மனிதனின் சிக்கல்களை, மன நோய்களைப் புரிந்துகொள்ள, அவற்றைப் பற்றிய
ஆராய்ச்சிகளைத்