எக்காலத்தும் தனிப் பெருமையுடன் ஓங்கி நிற்கும் இலக்கிய கருத்தாக்களில்
ஒருவர் ரவீந்திரநாத டாகுர். அவருடைய நூல்களின் எண்ணிக்கை பெரிய அளவினது.
இவ்வகையில் அவருக்கு இணை யாக நிற்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே.
ஓராயிரத்திற்கு மேற் பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்குக் குறையாத கீதங்கள்,
நூற்றுக்கணக்கான சிறு கதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி,
அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் அநேகம் அவருடைய நூல்களுள் அடங்கும்.
மனிதனுக்குச் சுவை பயக்கும் அத்தனை துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது.
தரத்திலும் சரி, வெகு சிலரே அடைந்துள்ள ஆக்கத்தின் சிகரத்தை அவர் எய்தி
யுள்ளார். விரிவானதும், பல்வகைச் சிறப்புக்கள் நிரம்பியதுமான அவருடைய
படைப்புகளை நோக்கும் பொழுது, உலக சரித்திரத் பாராட்டுவதில் வியப்பே இல்லை.