விடுகதைகள் சொல்லி அவற்றிற்கான விந்தையான விடைகளைக் கண்டு பிடிப்பது சுவையானதொரு பொழுது போக்காகும்.விடை கண்டு பிடிக்கும் வழக்கம் நமது தமிழ்நாட்டில் நெடுங்காலத்திற்கு முன்னரே அறிமுகமாகியிருந்தது. மக்களின் பொது அறிவை வளர்ப்பதில் விடுகதைகளுக்குப் பெரும் பங்குண்டு. கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட இந்த விடுகதையின்மூலம் தங்கள் பலதரப்பட்ட அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.இது விஞ்ஞான விரைவு உலகம். எதையும் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும் என விரும்பிச் செயல்படுகிற உலகம். எனவே,நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக பதில்களைப் பக்கத்திலேயே வெளியிட்டு உள்ளோம்.இதைப் படித்து வாசகர்கள், தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதுடன், இதுபோன்ற விடுகதைகளைத் தாங்களே புதிதாகத் தயார் செய்தும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறோம்.