இந்நூலில் உலகை உய்வித்த உத்தமர்கள் சில பேருடைய வாழ்க்கை வரலாறுகளும், அவர்கள் ஆற்றிய அருந்தொண்டுகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவர்களுள் சிந்தனையாளர்கள், மகான்கள், தேசபக்தர்கள், தியாகச் செம்மல்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள் உள்ளனர். அவர்களால்தான் உலகம் உயர்கிறது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.. இளைஞர் உலகம் இந்நூலைப் படித்துப் பயன்பெறுவதாக.