சமகாலக் கவிதைப் புத்தகங்கள் பலவற்றில் மொழிச் சிதைவை. பிறமொழிக கலப்பை, சொற்களை சேதமாக்குவதைக் கண்டு. சிறிதும் இலக்கணக் கூறு இன்றி குறைந்தபட்ச மொழிநடை கூட இல்லாமல், கவிதை எனும் பெயரில் இந்தப் பண்பட்ட செம்மொழியைச் சிதைக்கிறார்களே எனப் பலமுறை ஆதங்கப்பட்டதுண்டு.
ஆனால் என் அன்பிற்குரிய நண்பனின் தந்தை ஆண்டியப்ப சுவிராயர் மொழியை நளினமாகக் கையாண்டிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
காலத்திற்கு ஏற்ற கருத்துச் செறிவை, எண்ண ஓட்டங்களை. வாழ்வியல் நிகழ்வுகளை, சமூகப் பார்வையை எளிமையான நடையில் இனிமையான சொல்லாடலில் வடித்துத் தந்திருப்பது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
- த.செந்தில்குமார்
காவல் கண்காணிப்பாளர், தெற்கு ரயில்வே திருச்சி.