நவீன இலக்கியப் படைப்பாளா்கள் மகாபாரதத்தை அணுகும் விதமே வியப்பூட்டும்படியாக இருக்கிறது. இன்னும் எவ்வளவுபோ் வந்து தோண்டினாலும் புதையலை அள்ளி அள்ளித் தந்து கொண்டே இருக்கும் இதிகாசம்தான் மகாபாரதம்.
வியாசரின் அசல் பிரதியில் புதைந்து கிடக்கும் பல முரண்களையும் நவீன இலக்கியங்களே மீள்வாசிப்புச் செய்கின்றன. நவீன இலக்கியப் படைப்பாளா்கள் மகாபாரதத்தை அணுகும் விதமே வியப்பூட்டும்படியாக இருக்கிறது. இன்னும் எவ்வளவுபோ் வந்து தோண்டினாலும் புதையலை அள்ளி அள்ளித் தந்து கொண்டே இருக்கும் இதிகாசம்தான் மகாபாரதம். அதுதான் இதன் சிறப்பே. வியாசா் கொஞ்சமாக இடமளித்த கதாபாத்திரங்களும் இன்றும் பேசு பொருளாகின்றன. மகாபாரதத்தின் முக்கிய பதினாறு கதாபாத்திரங்கள் பற்றிய பதினாறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் மகாபாரதத்தின் இன்னொரு பிரதிதான். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானது.