அக்காலச் சொற்களும் இக்காலச் சொற்களும் வரலாற்றின் கூறுகளையும் பண்பாட்டின் எச்சங்களையும் தாங்கி நிற்பதை உணர்த்தும் பல கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. சொல்லும் பொருளும் வரலாறு உடையவை, அவற்றின் வரலாறு அறியத் தகுந்தனன்.
ஒன்பது கட்டுரைகளில் ஒன்று மட்டும் செக் அறிஞர் கமில் சுவலபில் ஆங்கிலத்தில் யவனர் பற்றி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு. சங்க இலக்கியத்தின் சொற்கள் இன்றையத் தமிழில் தொடர்வதையும் தொடராமல் போனதையும் காட்டும் கட்டுரைகள் உள்ளன. பாய்மரக் கப்பலின் பாய் என்பதற்கு மற்றொரு சொல் சங்க இலக்கியத்தில் இருப்பதை அறியவந்தது குறித்த கட்டுரையும் உண்டு. வளமான வட்டாரமொழிச் சொற்கள் பொதுமொழிக்கு வந்துசேர வழிகாட்டும் கட்டுரையும் உண்டு.