பாமர மக்கள் இதை சர்க்கரை வியாதி'' எனவும் குறிப்பிடுவார்கள் . ஏழைகள் ,நடுத்தர மக்கள் ஆகியோர் குறைவாகவும், பணக்காரர்கள் அதிகமாகவும் அறிந்து வைத்திருக்கும் மிகச் சில நோய்களில் இந்த நோயும் ஒன்றாகும். பணக்காரர்களில் பெரும்பாலானவர்கள் இந்நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். நீரிழிவு நோய் என்றால் என்ன ,அது ஏன் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் இயற்கை வைத்திய முறைகள் முதலான விவரங்கள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.