'தமிழ் இலக்கண மரபுகள்' என்ற புத்தகத்தின் தொடர்ச்சியே இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். இன்று திரும்பிப் பார்க்கும்போது மரபுகள் என்ற புள்ளியைச் சுற்றித் தொடர்ந்து சிந்தனைகள் இயங்கியுள்ளது தெரிகிறது.
பல பொருள் கொண்ட சொற்களில் ஒன்றை வேறுபடுத்த அதன் இயல்பு அல்லாத அடை ஒன்றைச் சேர்த்து அடையாளப்படுத்துவது சங்க கால மொழி ஆளுகை முறை. வேங்கை என்ற சொல் புலியையும் ஒரு வகை மரத்தையும் குறிக்கும் சொல். மரத்தைக் குறிக்கப் புலியின் செயலாகிய பாய்தல் என்பதை விலக்கிப் பாயா வேங்கை என்றும் புலியைக் குறிக்க மரத்தின் செயலாகிய பூத்தல் என்பதை விலக்கிப் பூவா வேங்கை என்றும் குறிப்பார்கள். இந்த நூலுக்கு ஒரு அழகான தொடர் தலைப்பாக இடப்பட்டுள்ளது.