இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் ' என்ற இந்நூல் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.உலக இலக்கியம் முதல் தமிழ் இலக்கியம் வரை உள்ள இலக்கியத்தின் வகைகள் மற்றும் அதன் தன்மைகளை பேரா.நா.வா. இந்நூலில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். சமூக மாறுதல், சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சி ஆகியவற்றை உணராதவர்கள் கலை கலைக்காகவே,உருவமே கலையின் உயிர்நாடி.அதன் உள்ளடக்கம் எதுவாகவும் இருக்கலாம் என்று கூறுவார்கள்.அனேகமாக இக்கொள்கை இன்று தேய்ந்து சுருங்கிப் போய்விட்டது.