உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும், 'கிரகப் பலன்' களை அறிய வேண்டுமென்றால், ஐந்து விதங்களில், ஐந்து வித கோணங்களில், ஆராய்ந்து அறிய வேண்டும்.
ஒன்று - கிரகத்தின் தன்மை, இரண்டாவது - கிரகத்தின் காரகத்துவம், மூன்றாவது - எந்தெந்த வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் இருக்கின்றன என்பது, நான்காவது - அந்தந்த வீடுகளுக்குரிய அதிபதிகள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்பது, ஐந்தாவதாக - எந்தெந்த வீடுகளுக்கு எந்தெந்த கிரகங்களின் சம்பந்தம் உள்ளது என்பதாகும்.