திருமணம் செய்விக்க, இருபாலருக்கும், தசப் பொருத்தங்கள் உள்ளனவா என்று
சரிபார்ப்பது நடைமுறையில் உள்ளது எளிதான முறையில், யாவரும்,
தசப்பொருத்தங்கள் பார்க்க, ஆயத்த நிலையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயத்த அட்டவணையைக் கொண்டு, தசப் பொருத்தங்கள் சரிபார்க்க, சில நொடிகளே
போதுமானதாகும். இந்த அட்டவணை, பெண்ணின் நட்சத்திர வாரியாக தலைப்பைக்
கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது பெண்ணின் நட்சத்திரத் தலைப்பின்கீழ், வரிசையாக
ஆணின் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆணின் நட்சத்திரத்திற்கு
நேராகப் பார்த்தால், தசப்பொருத்தங்கள் எண் வாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன
எந்த எண் எந்த பொருத்தத்தைக் குறிக்கும் என்பது அடுத்தப் பக்கத்தில்
பார்த்து தெரிந்து கொள்ளலாம் எளிதில் எந்தெந்த பொருத்தங்கள் உள்ளன,
எந்தெந்த பொருத்தங்கள் இல்லையென்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதே வரிசையின்
கடைசியில், எத்தனைப் பொருத்தங்கள் உள்ளன என்பதையும், குறிப்பில், பலனையும்
அறியலாம்.