பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்துக்கு எடுத்துக் காட்டான காவிய நூலாகும். பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களை உடையது. எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது முன்னூற்று எட்டு பாடல்களை உடையது. உலகப் பெரும் இதிகாசங்களில் பாரதம் ஒன்று வியாசர் இதை சமஸ்கிருதத்தில் எழுதினார். வில்லிப்புத்தூர் ஆழ்வார், நல்லாப்பிள்ளை முதலியோர் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரதக் கதைதான் ஆனால் முழுக்கதை அல்ல.