தமிழர்களின் தேசியக் காப்பியம் எனவும் உலகப் பொதுமறை எனவும் அழைக்கப்படும் நூல் திருக்குறள். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் ஒரு வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது போல் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட திருக்குறளில் பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
திருக்குறள் காமத்துப்பாலில் உளவியல் என்ற இந்த நூலில் திருக்குறள் இறுதி இயலான காமத்துப்பாலின் இருநூற்றைம்பது பாடல்களில் உளவியல் கருதுத்துகள் எவ்வாறு பொதிந்துள்ளன என்பதை வெளிக்கொண்டு வருவதே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.