காதலித்தவன் வெளிநாட்டில் வேலையில் இருப்பதால் பாட்டியின் உடல்நிலையை
முன்னிட்டு திடீர் திருமணம் செய்யப் பெரியவர்கள் முடிவெடுத்ததால்
பக்கத்துப் பண்ணையில் இருக்கும் விக்டரை காதலிப்பதாகப் பொய் சொல்லி அவனுடன்
ஒரு நாடகத் திருமணத்தை நடத்திவிடுகிறாள் சிவாத்மிகா.
பெண்களை
வெறுப்பவனான விக்டரை மெல்ல தன் பக்கம் இழுப்பவள் காதலிப்பதாக நினைத்து
கொண்டிருந்தவன் வாழ்க்கையில் சந்தித்த இடர்பாடுகளால் தற்கொலை செய்து
கொண்டான் என்று கேள்விபட்டவள் காதல் என்றால் என்ன என்று புரிந்து
கொள்கிறாள்.
தம்பதிகளுக்குள் காதல் நுழைகின்றது பெண்களின் மீதான வெறுப்பை சிவாத்மிகாவின் அணுகுமுறையால் மாற்றிக் கொள்கிறான் விக்டர்.