எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் எவருமிலர், எதுவும் தெரியாமலும் இவ்வுலகில் எவருமிலர். கற்றது கைமண்ணளவு- கல்லாதது உலகளவு. கல்வி கற்பதற்கு எல்லையுமில்லை. வயதுமில்லை, படித்தவர்கள் எழுதி வைத்ததை மட்டும் படித்துக் கொண்டிருக்கின்ற நாம், படிக்காத பாமரமக்களின் அனுபவ அறிவினில் முகிழ்த்த செய்திகளையும் படிக்க வேண்டும், இவ்வுலகில் எந்த வெற்றியையும் நாம் நினைத்தவாறு இலங்கை நோக்கி எளிதாகப் பெற்றுவிடலாம். அதற்கு முயற்சியும் , பயிற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். ஆனால் வாழ்க்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல; அதற்கு நல் அறிவோடு, நல்ல அனுபவமும் நமக்கு வேண்டும்.