இன்றைக்கு உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியத் திருநாட்டிற்கு வருகை தருகின்றபோது நம் நாட்டுத் திருக் கோயில்களின் பேரழகினையும், சிற்பக் கலையின் சிறப்பினையும், ஆலய வழி பாட்டினையும் கண்டு மகிழ விழைகின்றனர். மேலைநாட்டு நாகரீகத்தில் பெற முடியாத மன நிறைவான மகிழ்ச்சியோடு கூடிய ஆன்ம உணர்வினை பாரத மண்ணில் உணர்வதாகப் பல மேலைநாட்டு பேரறிஞர்கள், சிந்தனையாளர்கள், தத்துவப் பேராசிரியர்கள் பதிவு செய்துள்ள பல ஆவணங்கள் நிதர்சனமாக விளக்குகின்றன.
உள்ள அந்தவகையில் வடநாட்டுச் சிவத்தலங்கள் என்ற தலைப்பில் வேங்கடத்திற்கு அப்பாலே சிவத்தலங்களை, அரியானா, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்திராஞ்சல், ஒரிசா, குஜராத், திரிபுரா, புதுதில்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் என பதினாறு மாநிலங்களில் உள்ள சிவத்தலங்கள் பற்றிய செய்திகள், தல புராணம், வழித்தடம் போன்ற யாத்ரிகர்களுக்குரிய தகவல்களுடன் ஏராளமான வண்ணப் படங்களுடன் இப்புத்தகத்தினை ஓராண்டு காலம் முயன்று தந்துள்ளேன்.