நாட்டுப்புறப்பாடல்களில் 'நடை' பற்றி ஆராய்வது அப்பாடல் உருவான சமூகத்தின், அம்மக்களின் தனித் தன்மைகளையும், குணங்களையும் பற்றி ஆராய்வதாகும்.
இந்நடையியல் ஆய்வில் பாடல்களை ஒலி, சொல், தொடர் என்று தனிதனிக் கூறுகளாகப் பிரித்து ஆராய்கின்றனர். இதனால் பாடல் உருவான சூழல், சூழலுக்குத் தகுந்த மொழி ஆகிய இரண்டும் இதில் சிறப்பிடம் பெறுகின்றன.
இதற்காக நூலாசிரியர் தாலாட்டு பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், உடல் உழைப்பின்போது பாடப்படும் காட்டுப் பாடல்கள், கதைப்பாடல்கள் என அனைத்தையும் ஆராய்ந்துள்ளார்.
- பதிப்பகத்தார்