உயிர் வாழ்தலே உலக சாதனையாய் இருக்கும் இந்திய கிராமத்தின் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பத்திலிருந்து வந்தவன் நான். கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பர் பெரியோர். அந்த வறுமையில் வாழ்ந்தவன் நான். 1980களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களிடமிருந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தொடர்பு கிடைத்தது.
அவ்வப்பொழுது, பல்வேறு கவியரங்குகளில் பாடிய கவிதைகளை தொகுத்து 'தாய் மரங்கள்' எனும் தலைப்பில் தந்துள்ளேன்.
இந்நூலினை உழைக்கும் வர்க்கப் போராட்ட மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
அன்புடன்,
கவிஞர் சி. இராமலிங்கம்.