எந்த மாதமாக இருந்தாலும், ஒன்று முதல் முப்பத்தியொரு தேதி வரை பிறந்தவர்களுக்கென்று, அவரவர் இயல்பைப் பொறுத்தும்,கிரகங்களின் தாக்கத்தைப் பொறுத்தும் தனித்தனியாக பரிகாரக் கோயில்கள் உண்டு. அந்தந்த தேதிகளில் பிறந்தவர்கள் அந்தக் கோயில்களுக்குச் செல்லும்போது நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் அவர்களுக்குள் நிகழும். கோயில்களின் சாந்நித்யமும், அங்கு நிலவும் கிரகங்களின் கதிர்வீச்சுகளும் அவர்கள் வாழ்வை பன்மடங்கு நல்ல நிலைக்கு உயர்த்தும். அப்படி ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களின் குணநலன்களை ஆராய்ந்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான வழிகளை இந்த நூலில் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கான குணாதியங்களும், அவர்கள் செல்ல வேண்டிய பரிகாரக் கோயில்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள் போன்றவற்றையும் இதில் படித்து பயன்பெறுங்கள்...