ஆப்ரகாம் லிங்கன் - வரலாற்றில் அருமையான பெயர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களுக்கு அது ஒரு உந்து சக்தி! அடிமைப்பட்டவர்கள் ஆர்த்தெழுவார்கள். உரிமைப்புரியில் உறைவார்கள் எனபதற்கு ஒரு உதாரண சக்தி! அடிமைத்தளையை அறுத்தெறியும் திசையில் அவர் ஒரு ஆவேசம் - கறுப்பு வைரம்! தோழர் செங்கல்வராயன் அவர்கள் தமிழில் நல்லதோர் நூலைக் கொண்டுவந்து தமிழின இளைஞர்களை நல்லதோர் தடத்திலே நடைபோடச் செய்திருக்கிறார். ஆப்ரகாம் லிங்கன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை நிரப்படக் கூறியிருக்கிறார். எளிய நடை, எடுத்தால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆவலைத்தூண்டும் ஆற்றொழுக்கு - இந்நூலின் தனிச்சிறப்பாகும்.