இக்குறிப்புகளின் வழியே கடும் நெஞ்சுரம்
மிக்கவராக, சளைக்காத உழைப்பாளியாக, ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையையே
எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தவராக, பெரும் படிப்பாளியாக, நூல்களின்
வெறியராக, அறிவு மேதமையோடும் சமரசமில்லாத கொள்கையோடும் சக தோழர்களை கடிந்து
கொள்கின்றவராக, மனைவியை நினைத்து ஏங்கியழும் காதலராக, குறும்பு மிளிரும்
நகைச்சுவை உணர்வு கொண்டவராக என்று நமது முந்தைய நினைவுகளின் மீது
அடுக்கடுக்காக, புதியவராக படிகின்றார்.