இரும்பு பட்டாம்பூச்சிகள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அது ஒரு குடும்பக் கதையோ என்று நினைக்கத் தோன்றும். முதல் அத்தியாத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது பாதியில் அது காதல் கதையோ என்று சந்தேகிக்கத் தோன்றும். முதல் அத்தியாயத்தைப் படித்து முடிந்ததும் அது க்ரைம் கதையோ என்று நினைக்கத் தோன்றும். இரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கும்போது அது விஞ்ஞானக் கதையோ என்கிற எண்ணமும் தோன்றலாம். இந்தக் கதையைப் பொறுத்தவரைக்கும் all in one. கதையில் காதலும் இருக்கும், குடும்பப் பாசமும் இருக்கும். விஞ்ஞானமும் கொஞ்சம் எட்டிப் பார்க்கும். ஆங்காங்கே ரத்தக் கறைகளும் தெரியும். போலீஸ் நடமாட்டமும் உண்டு. சில அத்தியாயங்களைப் படிக்கும்போது லேசாக பயம் வரலாம்.