எண்ணிக்கை அளவில் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் சிறுகதைகள் குறைந்தனவே என்ற போதிலும் அவரின் புனைவு வெளி நுண்ணிய முரணழகுகளோடும், காத்திரமான அரசியல் ஓர்மையுடனும் நம்முன் வேர் மூலக்கல்வியாய் வியாபித்து நாமே மீட்டெடுக்க வாயில் சமைக்கின்றது.
அகராதியில் சொல் இருப்பதற்கும், கவிதையில் சொல் இயங்கு வதற்கும், புனைகதைகளிலும் சொல்லும் சொலவமும் (பழமொழி) இயங்குவதற்கும் இடையே பாரதூரமான வேறுபாடுகள் அமைந்தியல் வதை வெகு நுட்பமாகப் பதிவு செய்வார் இலக்குமிகு மாரன் ஞான திரவியம்.
- வே.மு. பொதியவெற்பன்