இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் , இக்கதையில் யாரும் எதிரி என்று யாரும் இல்லை. சூழ்நிலைகள் சார்ந்தும் ,மக்களின் தேவைகள் சார்ந்தும் கதை நகர்கிறது. இருளர்களின் தலைவரோ, கோவனின் அக்கா மகனோ இருவருமே எதிரி என்றோ, கதாநாயகனுக்கு எதிரானவர்கள் என்றோ நமக்குத் தோன்றவில்லை. அவர் அவர்கள் அவர்களின் செய்கைகளை அவர்களின் சூழலே தீர்மானிக்கிறது . அதையும் தீங்கு எண்ணும் நோக்கில் இல்லாமல் செய்தது அவர்களின் மேலும் நமக்கு மரியாதையை வரும் விதத்திலேயே உள்ளது.