விளையாட்டுகளும், பயிற்சிகளும் உடலையும், உள்ளத்தையும் செம்மைப்படுத்துவன. ஆனால் அவைகளை எல்லா இடங்களிலும், எல்லா வயதிலும் தனியாகவும் செய்ய முடிவதில்லை.
ஆனால் எளிய ஆசனங்களை எந்த வயதிலும், தனிப்பட்ட முறையிலும் விரும்பியபோது செய்திடலாம். மேலும் குறைந்த கலோரி சக்தி செலவழிப்பில் மிக உயரியபலன் தரும் யோகக் கலையின் ஒரு முக்கிய அங்கமான முப்பது வகையான ஆசனங்களை இந்நூலாசிரியர் தக்க விளக்கப் படங்களுடன் தொகுத்தளித்துள்ளார்.
தினமும் ஒரு ஆசனம் செய்து வர நலமான வாழ்வுக்கான அஸ்திவாரத்தை இலகுவாகப் பெறலாம்.
முயற்சியும், பயிற்சியும் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.
ஆரோக்கியம் வாழ்வில் தொடர தினசரி யோக நிலைப் பயிற்சிகள் அவசியம் தேவை என்பதையும் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.இயற்கை உணவுகளையும், யோகாவையும் இணைந்து மிக உன்னதப் பலன்களைப் பெறுவதற்கும் வழிகாட்டுகிறார்.
- நிர்மல்குமார் .