கன்னத்து முத்தமொன்று காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று பாரதி சொன்ன அந்தக் கன்னத்து முத்தம் இதை வைத்து நான் எழுதிய. மிகவும் அழுத்தம் இல்லாத அதிக வருத்தம் கண்ணீர் இல்லாத மென்மையான மென்மையான காதல் கதைதான் இது...அதனோடு சேர்ந்து கொஞ்சம் கிரிக்கெட்...ஹிரோ கிரிக்கெட் வீரர் என்பதால்!!! படித்து மகிழுங்கள் தோழமைகளே!
அவன் அருகில் ஓடி வந்து அவனை தோளோடு அணைத்து சிரித்தான் நண்பன் ரகு. ரகுராம் சுப்ர மணியன்!!! கண் சிமிட்டி கட்டை விரல் உயர்த்தினான். "சும்மா அதிருது. கீப் ராக்கிங்.." என்றபடி தட்டிக் கொடுத்தான் ஹரிஷை. ஹரிஷும் அணைத்துக் கொண்டான் நண்பனை. ரகுவுடன் பழக்கம் ஏற்பட்டது இப்போது சில நாட் களாகத்தான். ஆனால் பார்த்தவுடன் ஒருவருக் கொருவர் மனதால் நெருங்கிவிட்டது இவனுக்கே சற்று ஆச்சர்யம்தான்.